டெல்லி: டெல்லியில் போராடிய மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மேலும் “போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டது யார்?. மாணவர்களுக்கு எதிராக பெல்லட் குண்டுகளை பயன்படுத்த அனுமதித்தது யார்?.சாதாரண உடையில் வந்து மாணவர்களை தாக்கியது காவலர்களா அல்லது தன்னார்வலர்களா?” என ராகுல் காந்தி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
