ஊத்துக்குளியில் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த நகல் எரிப்பு போராட்டம்

திருப்பூர், ஜூலை 23: இந்தியா -அமெரிக்கா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவதாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய விவசாயிகள் நலனுக்கு விரோதமான இந்திய அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் கேசவன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் இந்திய அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த நகல் எரிக்கப்பட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Related Stories: