டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடை அணிந்து இந்திய கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான போலீஸ் தடியடியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். கையில் பதாதைகளை ஏந்தி காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அவர்களது கோரிக்கை இது வரை ஏற்றுக்கொள்ளாதால் அவர்களை ஆதரித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
நேற்றைய தினம் ராகுல் காந்தி தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினுடைய எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடியினுடைய இல்லத்திற்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரம் போராட்டம் நடத்தப்பட்டது.அதற்கு பிறகு போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்து போலிஸ் காவலில் வைத்து பின்னர் விடுவித்தனர்.
காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சனையை கையில் எடுத்து தொடர்ந்து போராடி வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று காலையில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி கட்சி எம்.பி.க்கள் குறிப்பாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சினுடைய தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட ஏராளமான எம்பி-க்கள் கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற வளாகத்திற்கு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
ஒன்றிய அரசுக்கு எதிராகவும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். ஒன்றிய அரசு உடனே தலையிட்டு தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் அதே போல உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற கோஷங்களை அவர்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
