- தேனாம்பேட்டை
- திருவோத்ரியூர்
- சென்னை
- டெனாம்பெட்
- Thiruvotiyur
- போக்குவரத்து பிரதி ஆணைய
- தாரிதரன்
- தெனாம்பேட்டை
- திருவந்தையூர்
சென்னை: சென்னையில் தேனாம்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இரு இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேனாம்பேட்டையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை துணை ஆணையர் தரணிதரன் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. அதேபோல் திருவெற்றியூரில் Transport தொழில் செய்ய கூடிய முருகேசன் என்பவரது வீட்டில் சோதனை நடைபெறுகிறது. துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் எந்த வழக்கு தொடர்பாக சோதனை நடைபெறுகிறது என அமலாக்கத்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. சோதனையின் முடிவில் முழுவிவரமும் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
