- போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புண
- பாடுகோட்டா
- tanjaya
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- தஞ்சை மாவட்டம்
- பாடுகோட்டா
தஞ்சை: போதை ஒழிப்பை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு பெரிய தெரு வழியாக மணிக்கூண்டு பகுதிக்கு வந்தது.
பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள் போதை ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை தங்களது கைகளில் ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியவாறும் வந்தனர். அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டையின் இதயப்பகுதியான மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்து பிரிவு எஸ்.ஜ. ஆறுமுகம் மற்றும் போலீசாருடன் இணைந்து போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர் மாணவிகள் அங்கிருந்து மீண்டும் பேரணியாக புறப்பட்டு அதே பெரிய தெரு வழியாக பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை அடைந்தனர்.
