சென்னை: தெரு நாய் பிரச்சனையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. தெருநாய்க்கடி சம்பவங்கள் நாள்தோறும் நடக்கின்றன; பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். தெருநாய் பிரச்சனையை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
