×

கண்ணூர் பல் மருத்துவ மாணவர் தற்கொலை மருத்துவக் கல்லூரி துறைத் தலைவர் கைது

 

கண்ணூர்: கேரள மாநிலம் அஞ்சாரக்கண்டியில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியின் மாணவரான நிதின் ராஜ், ஏப்ரல் 10 அன்று கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில் பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த மாணவர் நிதின்ராஜை, துறைத்தலைவரும் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூரைச் சேர்ந்த எம். கொண்டண்ட ராமிற்கு ெதாடர்பு இருப்பது தெரிய வந்தது.

மேலும் நிதின் ராஜின் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ராம் மற்றும் மற்றொரு ஆசிரியரான டாக்டர் சங்கீதா நம்பியார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நம்பியார் முன்னதாகவே கண்ணூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்தார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் துறைத்தலைவர் ராமின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து கர்நாடகாவின் குடகுப் பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Kannur Dental Student Suicide Medical College ,Kannur ,Nitin Raj ,Anjarakandy, Kerala ,
× RELATED பரந்தூர் விமானநிலைய திட்டத்தை...