டெல்டாவில் கேள்விக்குறியான 3.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி! 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வலுக்கும் கோரிக்கை

தஞ்சை: காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய நீர் இல்லாத காரணத்தால் சுமார் 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெல் சாகுபடியின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் குறைவானது, குறைந்த அழுத்த மின்சாரம், மும்முனை மின்சார தட்டுப்பாடு காரணமாக பம்புசெட் மூலம் தேவையான அளவு நீர்ப்பாய்ச்ச முடியாதது போன்ற காரணங்கள் காரணமாக நெற்பயிர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. இந்த மோசமான சூழலை கருத்தில் கொண்டு மேட்டூரில் இருந்து ஜூலை 20-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வேதனையுடன் பேசிய விவசாயிகள், தாங்கள் லட்சக்கணக்கான ஏக்கர் கணக்கில் ந டவு செய்திருக்கும் நெற்பயிர்கள் போதுமான தண்ர் காய்ந்து வருகின்றன. உடனடியாக தண்ணீர் பாய்ச்சாவிட்டால், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்து குறுவை நெற்பயிரும் கருகிவிடும்.

இதனால், விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு, மேட்டூர் அணையில் இருந்து கடைமடை வரை செல்லும் வகையில் 10 நாட்களுக்கு கட்டாயமாக தண்ணீர் திறக்க வேண்டும். இதன் மூலம் டெல்டா பகுதிகளில் நீர்மட்டம் உயரும், குறுவை நெற்பயிரையும் காப்பாற்றும் வாய்ப்புள்ளது என விவசாயிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

Related Stories: