ஈரோடு, ஜூலை 15: ஈரோடு மாவட்டம் கடத்தூர் காரமடை சாலை முனியப்பன் கோவில் பள்ளம் பகுதியில் சேவல் சூதாட்டம் நடப்பதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முன்தினம் அங்கு விரைந்து சென்று சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் கோபி மொடச்சூர் கருக்கம்பள்ளியை சேர்ந்த பாபு (38), புதுப்பாளையம் வீராசாமி வீதியை சேர்ந்த தியாகு (25), புள்ளப்பன்நாயக்கன்பாளையம் புது அரிஜன காலனியை சேர்ந்த புகழேந்தி (19), என்பது தெரியவந்தது.
3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 சேவல், ரூ.500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல், பெருந்துறையில் இருந்து சீனாபுரம் செல்லும் சாலையில் சிவசக்தி திருமண மண்டபம் அருகே பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வந்த 4 பேரை பெருந்துறை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்த பாஸ்கர் (65), ஈரோடு மேட்டுபுதூர் கினிபாளையத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன் (31), விஜயமங்கலம் மேக்கூரை சேர்ந்த தங்கவேல் (47), வெள்ளோடு சாலையை சேர்ந்த முருகன் (58) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
