சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் சாய்குமார் அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வரின் தனிச் செயலராக இருந்த உமாநாத், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கால்நடை பராமரிப்பு & மருத்துவச் சேவைகள் துறை இயக்குநராக கிருஷ்ணனுண்ணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குநராக ஷில்பா பிரபாகர் சதீஷ் பணியிட மாற்றம். தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குநராக அம்ரித் ஐஏஎஸ் பணியிட மாற்றம் செய்தனர்.
