கிருஷ்ணகிரி: மத்தூர் சுங்கச்சாவடி ஊழியர்களை கடத்திய சம்பவத்தில் 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டார். சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் வாகனங்களை அனுமதிக்கக் கோரி தகராறு ஏற்பட்டது. தகராறில் 2 சுங்கச்சாவடி ஊழியர்களை 30-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் தாக்கி கடத்திச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. கடத்தப்பட்ட ஊழியர்களை போலீசார் மீட்ட நிலையில் சக்திவேல் மற்றும் 4 சிறுவர்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
