சென்னை: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக தவெக பேச்சாளர் லயோலா மணி நியமனம். தலைமைச் செயலகத்தில் லயோலா மணிக்கு நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக லயோலா மணி 3 ஆண்டு பணியில் இருப்பார். முதல்வர் விஜய் பணி நியமன ஆணை வழங்கும்போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உடனிருந்தார். நியமன ஆணையை பெற்றுக்கொண்ட லயோலா மணி, கல்வித் துறையின் முன்னேற்றத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்று உறுசியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைப்பில் முக்கியப் பங்காற்றும் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பள்ளி மாணவர்களுக்கான பாடல்கள் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் விநியோகம் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக வயோவா மணி பொறுப்பேற்பது கல்வித் துறையில் முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, திமுக ஆட்சிக் காலத்தில் இந்தப் பொறுப்பை திண்டுக்கல் ஐ. லியோனி வகித்து வந்தார். தற்போது ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அந்தப் பொறுப்பில் லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்
