முள்ளிமலையில் தெவ்வ திருவிழா: படுகரின இன மக்கள் பங்கேற்பு

மஞ்சூர்,ஜூலை13: மஞ்சூர் அருகே முள்ளிமலை மாலிங்கையா கோயிலில் தெவ்வ திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது முள்ளிமலை. இப்பகுதியில் வசித்து வரும் படுகரின மக்கள் ஆண்டுதோறும் தெவ்வ ஹப்பா என அழைக்கப்படும் அறுவடை திருவிழாவை விமரிசையாக கொண்டாடி வருவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டிற்கான தெவ்வ திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய அம்சமாக ‘அரிக்கட்டுதல் மற்றும் மாலிங்கையா கோயிலில் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பாரம்பரிய வெள்ளை உடைகளை உடுத்தி வந்திருந்த படுகரின மக்கள் பருவம் தவறாமல் மழை பெய்யவும்,விவசாயம் செழிக்க வேண்டி புதியதாக விளைந்த கோதுமை,திணை உள்ளிட்ட பயிர்களை குல தெய்வத்திற்கு படைத்தனர். தொடர்ந்து அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காணிக்கை செலுத்தினர். விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் படுகரின மக்களின் பாரம்பரிய நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

Related Stories: