தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

 

ஈரோடு, ஜூலை 6: ஈரோடு மாணிக்கம்பாளையம் சுப்ரமணிய நகர் 3வது வீதி பெரிய வலசை சேர்ந்தவர் கோபி (35). திருமணம் ஆகாதவர். சுமை தொழிலாளி. மது பழக்கம் இருந்தது. இதனால், கல்லீரல் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்தார். இருப்பினும், மது பழக்கத்தை கைவிடவில்லை. இதனால், உடல் நிலை மோசமடைந்தது. இதனால், வீட்டில் கோபி தூக்கிட்டு கொண்டார். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து பொதுமக்கள் ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அங்கு சென்று பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: