கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற மேலும் ஓராண்டு காலநீட்டிப்பு

சென்னை: அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற மேலும் ஓராண்டு காலநீட்டிப்பு செய்து நகர் ஊரமைப்பு ஆணையர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு: திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011 ஆண்டிற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 6.7.2026 முதல் 5.7.2027 வரை பன்னிரெண்டு மாதங்கள் காலநீட்டிப்பு செய்து,

ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அரசாணை எண்.137 வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள் 3.7.2026ல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். மேலும், இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: