காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்கு பின் மாணிக்கம் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு எப்பொழுது வர வேண்டுமோ? அப்பொழுது வருவார். தமிழ்நாட்டிற்கு வருவது காங்கிரஸ் கமிட்டி அறிவிக்கும். 21ம் தேதி பயணம் என்பது யூகம் மட்டுமே. அதுவரை ஊடகங்கள் யூகங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். யார் எந்தெந்த கட்சியில் சேருவார்கள் என்பதை அவரவர் முடிவு செய்வார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டணி தர்மத்தை எப்பொழுதும் மாண்போடு பின்பற்றும் கட்சி, நாங்கள் மற்றவர்களைப் போல தேவையில்லாத இடங்களில் வெளியில் பேசுவதில்லை, இடம், பொருள், ஏவல் அறிந்து எங்கு பேச வேண்டுமோ? அங்கு தகுந்த மரியாதையுடன் எங்களது கருத்துகளைப் பதிவு செய்வோம்.
ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் தவெகவில் தொடர்ந்து இணைவதற்கு அவை அனைத்தும் நீதிமன்றத்தில் வழக்காக இருப்பதாகவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன். மேலும் தவெகவில் இணைபவர்களை நாங்கள் தூய சக்தி என்று கூறவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு நடைபெற்றது ஆகையால் அதை திசை திருப்பாதீர்கள். இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.
