திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன, பூஜை கட்டண உயர்வை இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் ஆணை

மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன, பூஜை கட்டண உயர்வு தொடர்பான விவரத்தை இந்து அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் தரிசன கட்டண உயர்வு தொடர்பாக பக்தர்களிடம் கருத்து எதுவும் கேட்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: