ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுவர்கள், ஒரு பெண் உட்பட 4 பேர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி கிழக்குத் தெருவை சேர்ந்த மீனவர் பைரோஸ் கான், இவரது மனைவி ஆயிஷா பீவி (45)இவரின் தம்பி ஜலில் (40) மற்றும் 17 வயது மகன், 11 வயது மகள் ஆகிய 4 பேருடன் இன்று காலையில் ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்தனர்.

அப்போது நுழைவாயில் பகுதியில் நான்கு பேரும் மறைத்து வைத்து கேனில் கொண்டு வந்திருந்த
பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தீ குளிக்க முயன்றவர்கள் மீது அங்கு பணியில் இருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: