தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு தொடங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இன்றும், நாளையும் தகுதித் தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு நடைபெறுகிறது. இடைநிலை ஆசிரியர் பணிக்கான முதல்நாள் தேர்வை 222 மையங்களில் 61,386 பேர் எழுதுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இரண்டாம் நாள் தேர்வை நாளை 1,67,743 பேர் எழுத உள்ளனர்.

Related Stories: