அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18-ஆக உயர்வு: அம்மோனியாவை பத்திரமாக அகற்ற ஆட்சியர் உத்தரவு

 

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே கன்னிகைபேரில் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா பெண் மகாராணா ஜுவாங்கா (19) உயிரிழந்துள்ளர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ம் தேதி அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த வடமாநிலத் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலருக்கு வாய், மூக்கிலிருந்து ரத்தக்கசிவும் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் சிக்கிய சிலர் உடல் நலம் தேர்ச்சி பெற்று, மீண்டும் அவர்களின் சொந்த ஊருக்கே அனுப்பப்பட்டனர். கடுமையாகப் பாதிக்கப்பட்ட பலருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்படு வருகிறது. இதற்கிடையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகிறது. தற்போதுவரை இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18-க உயர்ந்திருக்கிறது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவைச் சேர்ந்த அலத்தி மகாராணா ஜுவாங்கா(29) உயிரிழந்திருக்கின்றனர்.

திருவள்ளூர் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்து 18 பேர் உயிரிழந்த நிலையில், நாளை (ஜூலை 4), நாளை மறுநாள் (ஜூலை 5) அம்மோனியாவை பத்திரமாக அகற்ற ஆட்சியர் கவிதா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தொழிற்சாலையைச் சுற்றி 500 மீ.பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளார். உதவிக்கு 99525 90412 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Related Stories: