பள்ளிபாளையம் அருகே ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த வட மாநில தொழிலாளி பலி!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த 45 வயது வட மாநில தொழிலாளி உயிரிழந்தார். ரயிலில் இருந்து விழுந்ததும் பலத்த காயங்களுடன் வீடு வீடாகச் சென்று உதவி கேட்ட அவருக்கு, யாரும் உதவ முன்வராததால், அவர் உயிர் பிரிந்தது. அதிகாலையில் நடந்த இச்சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: