செங்குன்றம் அருகே தவெக நிர்வாகியை தாக்கிய அதே கட்சியைச் சேர்ந்த நபர் கைது

 

சென்னை: செங்குன்றம் அருகே தவெக நிர்வாகியை தாக்கிய அதே கட்சியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் அங்களாக ஈஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அரண்களாவளர் குழு நியமனம் செய்யப்படுவது வாடிக்கை. அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து ஆலையத்தில் அறங்காவலர் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் சமீபத்தில்தான் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளார். அண்மையில் இந்த கோவிலில் விளக்குகள் சரியாக பராமரிக்கவில்லை என ஆலையத்தின் நிர்வாகியை ராஜேந்திரன் கேட்டுள்ளார்.

ஏன் எனது தந்தையிடம் வாக்குவாதம் செய்கிறீர்கள் என தவெக ஊராட்சி செயலாளர் கோபாலகிருஷ்ணனுக்கும், தவெக பிரமுகரான ராஜேந்திரனுக்கும், இடையே தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் ராஜேந்திரன் கோபாலகிருஷ்ணன் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான கோபாலகிருஷ்ணனின் தந்தை அறங்காவலர் குழுவில் உள்ளார். தவெக நிர்வாகி கோபாலகிருஷ்ணன் மீது கல் வீசித் தாக்குதல் நடத்திய அக்கட்சி பிரமுகர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேந்திரன் தவெகவில் இணைந்த சில நாட்களில் சொந்த கட்சி நிர்வாகி மீதே தாக்குதல் நடத்தியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

Related Stories: