- எடப்பாடி பழனிசாமி
- அஇஅதிமுக
- எஸ்.பி. வேலுமணி
- கோயம்புத்தூர்
- கோயம்புத்தூர் விமான நிலையம்
- சட்டமன்ற உறுப்பினர்
- எடப்பாடி பழனிசாமி…
கோவை: அதிமுகவில் சாதாரண உறுப்பினராக தொடர்கிறேன், மகளிர் அணி கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி என்னை அழைக்கவில்லை என எஸ்.பி.வேலுமணி கூறினார். கோவை விமான நிலையத்தில் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள், எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாக கூறி உள்ளோம். கட்சிக்காக உழைத்தவர்கள், அந்தந்த மாவட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து உழைத்தவர்கள், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக உழைத்த அனைவருக்கும் அந்தந்த பதவி வழங்கப்படவில்லை.
எனவே, நான், அன்பழகன், தங்கமணி உள்ளிட்டவர்கள் எங்களுக்கு கொடுத்த பதவி வேண்டாம். நாங்கள் சாதாரண உறுப்பினராக தொடர்வோம் என்று கூறி உள்ளோம். இந்த விஷயத்தில் நாங்கள் தெளிவாக கூறி இருக்கிறோம். அதிமுக மகளிர் நிர்வாகிகள் கூட்டத்திற்கு எப்போதும் வளர்மதி அழைப்பார். ஆனால், இந்த முறை எங்களுக்கு தகவல் இல்லை. எடப்பாடி பழனிசாமியும் எங்களை அழைக்கவில்லை.
இக்கூட்டத்திற்கு முன்பு நாங்கள், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் கொடுத்துவிட்டதால், எங்களை அந்த கூட்டத்திற்கு அழைக்காமல் இருந்திருக்கலாம். நான் சொன்ன ஜாம்பவான்கள் என்ற அர்த்தம் வேறு. கட்சிக்காக உழைத்தவர்கள், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கு துணையாக இருந்தவர்கள் என எல்லோருக்கும் மீண்டும் அவரவர் வகித்து வந்த பதவியை கொடுப்பார் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர் கொடுக்கவில்லை. நாங்கள் தெளிவாக கடிதத்தில் கூறி உள்ளோம். அதிமுக நன்றாக இருக்க வேண்டும். கட்சி நன்றாக இருக்க வேண்டும். எனவே பொதுச்செயலாளர் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
