×

கேபினட் அமைச்சருக்கு ஆசைப்படாத வைகோ இன்று குறுக்கு வழியில் மாநில அமைச்சருக்கு ஆசைப்படுகிறார்: திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் குற்றச்சாட்டு

சென்னை: கேபினட் அமைச்சருக்கு ஆசைப்படாத வைகோ இன்று மாநில அமைச்சருக்கு, குறுக்கு வழியில் பிட் அடித்து பாசாகி வேலைக்கு சேர ஆசைப்பட்டது போல ஆசைப்படுகிறார் என்று திமுக வர்த்தக அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நான் நிற்க மறுத்தேன், திமுக வற்புறுத்தலால் நின்றேன் என்று பேசும் வைகோவே, மதிமுக சார்பில் 2019ல் கணேசமூர்த்தி ஈரோட்டில் உதயசூரியனில் நின்று வென்றார் தானே, மதிமுக சார்பில் 2021ல் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியனில் நின்று வென்றவர்கள் தானே, அப்போது சொல்லாமல், இப்போது மட்டும் சொல்வது ஏன்?

உதயசூரியனில் நிற்க சொல்லி என்னை மட்டும் தான் வற்புறுத்தினார்கள், விசிக, முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட்டுகளை சொல்ல மாட்டார்கள் என சொல்லும் வைகோ, வி.சி.க.வுக்கு பானை சின்னமும், இந்திய யூனியன் முஸ்லிம்களுக்கு ஏணி சின்னமும், தே.மு.தி.க.விற்கு முரசு சின்னமும், கம்யூனிஸ்ட்டுகளுக்கு கதிர் அரிவாள், சுத்தி அரிவாள் சின்னமும் உண்டு உங்களுக்கு என்று தனிச் சின்னம் இல்லாததால் தான் உதயசூரியனில் நிற்கச் சொன்னோம்.

24 ஆண்டு மாநிலங்களவை, 5 ஆண்டு மக்களவை என ஒன்றியத்தில் 20 ஆண்டுகளுடன், துரை வைகோ 5 ஆண்டுகள் மக்களவை என ஒன்றியத்தில் 34 ஆண்டுகள் அனுபவித்துவிட்டு, ஓரிரு மாதத்திற்காக ஓடுகிறீர்களே நியாயமா?. வைகோவை உயர்த்திட விஜய் விரும்பினால், ம.தி.மு.க.வை எதிர்த்து த.வெ.க. வென்றிட்ட மதுரை தெற்கு, மொடக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்துவிட்டு வைகோவை நிற்கச் சொல்லுங்கள். குறைந்தபட்சம் திருச்சி காலி இடத்திலாவது வைகோவை நிறுத்தி வெற்றி பெறச் செய்யுங்கள் பார்ப்போம் என்று கூறுகின்றனர்,

உயிர் கொடுத்து என்னை வெற்றி பெற வைத்த மக்களின் முகத்தில் நான் எப்படி முழிப்பேன் என முடிவு எடுத்த ராஜேந்திரன், செந்தில் தன்மானமிக்கவர்கள். மறைந்த பிரதமர் வாஜ்பாய், மை சன் வைகோ, நீ என் அமைச்சரவையில் கேபினட்டுக்காக வா என அழைத்தேன். ஏன் வர மறுத்துவிட்டாய் என வைகோவிடம் கேட்கும் போது, பக்கத்தில் நான் இருந்தேன். அன்று இந்திய கேபினட் அமைச்சருக்கு ஆசைப்படாத வைகோ இன்று மாநில அமைச்சருக்கு, குறுக்கு வழியில் பிட் அடித்து பாசாகி வேலைக்கு சேர ஆசைப்பட்டது போல ஆசைப்படுகிறார்.

உங்கள் தரம் எவ்வளவு குறைந்து உள்ளது என்பதற்கு இந்த ஒப்பீடே சரியாக இருக்கும். பழைய வீரம் ஈரம் இப்போது இல்லை. இப்போது ம.தி.மு.க. தொண்டன் அறிவாலய கதவை தட்டிக் கொண்டிருக்கிறான். ம.தி.மு.க.வினரை தி.மு.க.விற்கு அழைக்கிறேன். தோழர் மகேந்திரனை த.வெ.க.வில் சேர்த்தால் வராத கோபம் வைகோ கட்சியினரை ராஜினாமா செய்ய சொன்னார் விஜய் என்று வைகோவே சொன்னபோது, வாய் திறவாத சி.பி.ஐ. மாநில செயலாளர் வீரபாண்டியனுக்கு, மெஜாரிட்டி இல்லாததால் சண்டை போட்டு ஆட்சி கவிழும் பட்சத்தில் தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டும் என்று தளபதி சொன்னால் மட்டும் கோபம் வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vaiko ,DMK ,Kasimuthu Manickam ,Chennai ,
× RELATED ‘தமிழகத்தில் இணையாட்சியை உருவாக்க...