×

அருணாச்சல் வெள்ளத்தில் 4 பேர் பலி

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகி விட்டனர். 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அருணாச்சல் மாநிலத்தில் கடந்த 7 நாட்களாக பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

இதில் சிக்கி 4 பேர் பலியாகி விட்டனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2 பேரை காணவில்லை. 21 பேர் காயமடைந்துள்ளனர். மொத்தம் 90,499 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ள பாதிப்பு பகுதிகளை முதல்வர் பெமா காண்டு மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், கிரன் ரிஜிஜு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Tags : Arunachal ,Itanagar ,Arunachal Pradesh ,
× RELATED மழை பெய்யும் வரை காத்திருங்கள்...