அரியானாவில் 220அடி ஆழ ஆழ்துறை கிணற்றில் விழுந்த 4வயது குழந்தை: மீட்புப் பணிகள் தீவிரம்

அம்பாலா: அரியானாவின் அம்பாலா மாவட்டம் பாராரா பகுதியில் உள்ள தனவ்ரா கிராமத்தை சேர்ந்தவர் கர்னைல் சிங். நேற்று அதிகாலை வழக்கம்போல் வயலுக்கு சென்றுவிட்டார். அதன் பின்னர் அவரது மகன் மஞ்சித் அவருக்கு உணவு கொண்டு சென்றார். அப்போது அவரது 4 வயது மகன் நிர்பாயுட் உடன் வந்துள்ளார். வயலில் குழந்தை நிர்பய் அங்கு ஓடியாடி விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென அங்கு திறந்த நிலையில் இருந்த 220 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். குழந்தையை காணாததால் மஞ்சித் மற்றும் அவரது தந்தை நிர்பயை தேடியுள்ளனர்.

அப்போது ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைகளின் சத்தம்கேட்டுள்ளது. தொடர்ந்து சிறுவனின் தந்தை, தாத்தா மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தையை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சிறப்பு உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குழந்தையை மீட்பதற்கு ராணுவத்தின் உதவியும் கோரப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: