புதுடெல்லி: நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் தலைவரான காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் எந்த இந்திய வீரருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் தெரிவித்தார்.
ஆனால் சமீபத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஆயுதப் படையை சேர்ந்த 6 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு துறை அமைச்சர் தவறான தகவலை கூறி அவையை தவறாக வழிநடத்தி உள்ளார். இதன் அடிப்படையில் இவ்விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
