மழை பெய்யும் வரை காத்திருங்கள் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக அமைச்சர் சொல்கிறார்

மண்டியா: மழை பெய்யும் வரை காத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு தற்போதைக்கு தண்ணீர் திறக்க இயலாது. கே.ஆர்.எஸ் அணையில் தண்ணீர் இல்லை என்று கர்நாடக அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்தார். மண்டியாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்திற்கு காவிரியில் இது வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. கே.ஆர்.எஸ் அணையில் தண்ணீர் இல்லை.

குடிநீர் எங்களின் முன்னுரிமை. காவிரி நதிநீர் ஆணையத்திடம் தண்ணீர் இல்லை என்று கூறியுள்ளோம். தற்போது மழை பெய்யும் வரை தண்ணீர் திறக்க முடியாது. மழை பெய்தால் பிரச்னை இல்லை. கேஆர்எஸ்.க்கு சமர்ப்பண பூஜை செய்து ஓராண்டு ஆகிறது. மழை பெய்து அணை நிரம்பினால் சமர்ப்பண பூஜை செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறினார்.

Related Stories: