எதிர்ப்புக்கு பணிந்தது தவெக அரசு: மாநகராட்சி தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதற்கான டெண்டர் ரத்து

 

சென்னை: மாநகராட்சி தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் தாம்பரம், ஆவடி, ஓசூர், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார்மயமாக்க தவெக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெண்டர் வரவேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் தூய்மை பணிக்கு குடியிருப்பாளர்களிடம் தனி தொகையை வசூலித்துக் கொண்டு தூய்மை பணிகளை தனியாருக்கு விடுவதற்கு தூய்மை பணியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மாநகராட்சி தூய்மை பணியை தனியார்மயமாக்க எதிர்ப்பு எழுந்தது. தேர்தலுக்கு முன் ஒரு பேச்சா, பின் ஒரு பேச்சா என கூட்டணி கட்சிகளே விமர்சித்திருந்தன. இந்நிலையில் 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவது தொடர்பான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் போராட்டம், கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பால் தவெக அரசு திட்டத்தை கைவிட்டது.

 

Related Stories: