சென்னை: சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் உறுதிமொழி ஏற்றார். ‘நான் போதைப்பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்’ போன்ற வாசகங்கள் அடங்கிய உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். ‘போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை தருவேன்’.
‘தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை வேரறுக்க துணை நிற்பேன்’ என முதல்வர் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர். போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை முதல்வர் விஜய் உள்ளிட்டோர் ஏற்றுக்கொண்டனர். முன்னதாக, நிகழ்ச்சி மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் விழிப்புணர்வு வாசகம் எழுதி முதல்வர் விஜய் கையொப்பமிட்டார். போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய் விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கிவைத்து மக்களோடு மக்களாக முதல்வர் விஜய் பங்கேற்றுள்ளார்.
‘Start Run, Stop Drugs என்ற பெயரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. சென்னை காமராஜர் சாலையில் நடைபெறும் நிகழ்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்.
