பாளையங்கோட்டையில் நாளை தூய திரித்துவ பேராலய 200வது ஆண்டு நிறைவு விழா

 

கே.டி.சி.நகர், ஜூன்25: தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலம் பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தின் 200-வது ஆண்டு நிறைவு விழா, நாளை 26-ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது.
ஜெர்மனி நாட்டில் இருந்து ஊழியம் செய்வதற்கு நெல்லை வந்த ரேணியஸ் ஐயர் இங்கு தங்கி இருந்து நெல்லை, தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் 400 மேற்பட்ட சர்ச்சுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை நிறுவினார். அவர் காலத்தில பாளை திரித்துவ பேராலயம் கட்டி திறக்கப்பட்டது. ஓலை கூரையில் துவங்கப்பட்ட ஆராதனை கூடம் இன்று வானளாவிய கோபுரத்தோடு அமைந்துள்ளது. இந்த தேவாலயம் ‘‘ஊசி கோபுரம்” என்று அழைக்கப்டுகிறது. இது பாளையங்கோட்டையின் அடையாளமாக பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆன்மீக வாழ்வுக்கு ஆசீர்வாதமாக விளங்குகிறது.

Related Stories: