நெல்லை, ஜூன் 25: பாளையங்கோட்டையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 30ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம். இதுதொடர்பாக நெல்லை அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ‘நெல்லை கோட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, பாளையங்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளும் குறைதீர்க்கும் கூட்டம் பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் வரும் 30ம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில் வாடிக்கையாளர்கள் பங்கேற்று தபால் பணிகள் குறித்த தங்களது குறைகளையும், சேவையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் உரிய விவரங்களுடன் நேரில் தெரிவிக்கலாம்
