பெரியூர் மலைகிராம மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி திமுக மனு

 

தேனி, ஜூன் 25: பெரியகுளம் நகர திமுக துணைச் செயலாளர் சேது தலைமையில் அகமலை ஊராட்சிக்குட்பட்ட பெரியூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரியகுளம் வட்டாட்சியர் மருது பாண்டியனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், அகமலை ஊராட்சிக்குட்பட்ட மலை கிராமமான பெரியூர் மலைப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வாழ்கின்றார்கள். பல ஆண்டுகளாக குடியிருக்கும் இந்த கிராம மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் பாதுகாப்பாக வீடு கட்டிக்கொள்ளவும், ஒன்று கூடி தனியாரிடம் இருந்து நிலத்தினை கிரையம் பெற்று தனித்தனி வீட்டு மனைகளாக பிரித்துள்ளனர். இத்தகைய கிராமத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளாது. மேலும், கிராம மக்களுடன் பெரியகுளம் தாசில்தார் அலுவலகம் சென்று தாசில்தார் மருது பாண்டியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Related Stories: