நத்தம், ஜூன் 25: நத்தம் அருகே செந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியை தேவமனோகரி தலைமை வகித்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இதில் கலந்து கொண்டவர்கள் போதை பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, மீண்டும் பள்ளியை அடைந்தனர். இதில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் போதை பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
