ஆனைமலை நெல் விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு

 

கோவை, ஜூன் 25: கோவை மாவட்டம் ஆனைமலை வட்டார நெல் சாகுபடி விவசாயிகள் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் நடப்பாண்டில் நெல் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் விரிவுபடுத்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.  அதன்படி, இயந்திரநடவு அல்லது நேரடி நெல் விதைப்பின் மூலம் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் மானியமும், விதை நெல்மானிய விலையிலும், திரவ உயிர்உரம் ஏக்கருக்கு ஒரு லிட்டர் மற்றும் நெல் நுண்ணூட்டம் ஐந்து கிலோ என மானியத்தில் சிறப்பு தொகுப்பாக வழங்கப்படுகிறது.

 

Related Stories: