×

152 மருத்துவ சீட் சரண்டர் செய்த விவகாரம் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: தமிழ்நாடு அரசு 152 மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சரண்டர் செய்துள்ளது. இதனை எதிர்த்து பயிற்சி மருத்துவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த இடங்களில் இன் சர்வீஸ் மருத்துவர்கள் நிரப்பப்பட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான விடுமுறை கால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘மருத்துவ பட்டமேற்படிப்பில் இரண்டாவது கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இதனால் இன் சர்வீஸ் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இரண்டாவது கலந்தாய்வு அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலனை அடிப் படையாக கொண்டு மீண்டும் கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று வலியுறுத்தி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அப்போது குறுக்கிட்ட நீதிபதி பி.வி.நாகரத்னா,‘‘ இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோர் பதிலளிக்க வேண்டும்’’ என்று நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரனையை ஜூலை 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags : Supreme Court ,Tamil Nadu government ,New Delhi ,India ,
× RELATED கிரெடிட் கார்டு மோசடிகள் இழந்த பணத்தை...