×

மறைந்த ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதி சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

புதுடெல்லி: ஈரான் உச்ச தலைவர் மறைந்த அயதுல்லா அலி காமேனியின் இறுதி சடங்கில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் கூட்டாக கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் தாக்குதலை தொடங்கின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அவரது மகள், மருமகன், பேத்தி ஆகியோர் கடந்த மார்ச் 1ம் தேதி கொல்லப்பட்டனர்.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை ஈரானும், அமெரிக்காவும் ஏற்று கொண்டுள்ளன. இதையடுத்து மறைந்த அயதுல்லா அலி கமேனியின் உடல் 4 மாதங்களுக்கு பிறகு ஜூலை 9ம் தேதி மஷ்ஹாத் நகரில் உள்ள ஷியாக்களின் புனித தலமான இமாம் ரெசா புனித தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

அவரது மகள், மருமகனுக்கான இறுதிச்சடங்குகளும் அதேநாளில் நடைபெறும் என ஈரான் ஏற்கனவே தெரிவித்திருந்தது.  இந்நிலையில் அயதுல்லா அலி காமேனியின் இறுதி சடங்கில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஈரான் அதிபர் பெசேஷ்கியன் அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வௌியாகி உள்ளன. ஆனால் இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வௌியாகவில்லை.

Tags : PM Modi ,Supreme Leader ,Khamenei ,New Delhi ,Iran ,Modi ,Ayatollah Ali Khamenei ,US ,Israel ,
× RELATED கிரெடிட் கார்டு மோசடிகள் இழந்த பணத்தை...