×

ஆந்திராவில் தங்கச்சுரங்க திட்டம் தொடக்கம்

திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜொன்னகிரியில் தங்கச்சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஜியோ மைசூர் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் டெக்கான் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ரூ.405 கோடி முதலீட்டில் தங்கம் வெட்டி எடுப்பதற்காக ஆலையை அமைத்துள்ளன.

இதற்காக மாநில அரசு 1,500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. தற்போது ​​ முதற்கட்டமாக 600 ஏக்கரில் சுரங்கப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கேற்ப பதப்படுத்தும் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜொன்னகிரி தங்கச்சுரங்க திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு கலந்துகொண்டு சுரங்க திட்டத்தை தொடங்கி வைத்தார். இங்கு ஆண்டுக்கு ஒரு டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

Tags : Tangachuranga ,Andhra ,THIRUMALI ,TANGACHURANGAM ,JONNAGIRI, KURNOOL DISTRICT ,AP STATE ,GEO MYSORE SERVICES INDIA PRIVATE LIMITED ,DECCAN GOLD MINES LIMITED ,
× RELATED கிரெடிட் கார்டு மோசடிகள் இழந்த பணத்தை...