திருச்சுழி, ஜூன் 24: திருச்சுழி அருகே அனுமதி இன்றி எம்-சாண்ட் கடத்திய டாரஸ் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தமிழ்பாடி பகுதியில் தாசில்தார் கருப்பசாமி தலைமையிலான வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது, அனுமதியின்றி எம்-சாண்ட் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 6 யூனிட் எம்-சாண்டுடன் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார், லாரி டிரைவர் சிவகங்கை மாவட்டம் அரசனூரை சேர்ந்த மதுபாலன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
