×

சீர்காழியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு தொடக்கம்

சீர்காழி, ஜூன் 24: சீர்காழியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பயிற்சி வகுப்பு தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தென்பாதி தனியார் திருமண மண்டபத்தில் சீர்காழி நகராட்சி சார்பில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் பயிற்சி வகுப்பு வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு தொடர்பான முதற்கட்ட கூட்டம் நடைபெற்றது.

வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி, நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் மரகதம், நகராட்சி மேலாளர் தினகர் ஆகியோர் கலந்து கொண்டு நகராட்சி பகுதியில் வீடுவீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி வகுப்புகள் 3 நாட்கள் நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Discord ,Sirkazhi Municipality ,Sirkazhi Tenpathi Private Wedding Hall ,Mayiladuthura District ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...