- நாகப்பட்டினம்
- தமிழ் மான்ய விவசாயத் தொழிலாளர் சங்கம்
- நாகப்பட்டினம் கலெக்டர்
- யூனியன் அரசு
- மாவட்ட செயலாளர்
- பாஸ்கர்
நாகப்பட்டினம், ஜூன் 24: 100 நாள் வேலைத்திட்டத்தை ஒன்றிய அரசு முழுமையாக அமல்படுத்த கோரி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமை வகித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன், மாவட்டத் தலைவர் நாகராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் முருகையன், செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி, நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். வேலைத்தளத்தில் உயிரிழப்பு நேரிட்டால் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
பழைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தை ஒன்றிய அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆண்டிற்கு 200 நாள் வேலை கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வி.பி.ஜி. ராம்ஜி திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
