×

போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மினி மாரத்தான் போட்டி 26ம்தேதி நடக்கிறது

பெரம்பலூர், ஜூன் 24: பெரம்பலூர் மாவட்டத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நாளை மறுநாள் (26ம்தேதி) ஸ்டார்ட் ரன்- ஸ்டாப் ட்ரக்ஸ்\” என்றக் கருப் பொருளுடன் மினி மாரத்தான் ஓட்டம் நடக்கிறது.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 26ம்தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு, சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பெரம்பலூரில் வரும் 26ம்தேதி காலை 6:30 மணிக்கு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு \”ஸ்டார்ட் ரன்- ஸ்டாப் ட்ரக்ஸ்\” என்றக் கருப் பொருளுடன் மினி மாரத்தான் ஓட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக 14 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் விதமாக நடத்தப்படும் இந்த மினி மாரத்தான் ஓட்டம், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் மாவட்ட தொழில் மையம் அருகில் இருந்து தொடங்கி பாலக்கரை, புது பஸ்டாண்ட், நகராட்சி அலுவலகம் வழியாக, 4 ரோடு முன் மலர் மருத்துவமனை அருகே யு-டர்னில் திரும்பி மீண்டும் புது பஸ்டாண்ட், பாலக்கரை வழியாக கலெக்டர் அலுவலக போர்ட்டிக்கோவில் முடிவடையும் விதமாக இந்த மினி மரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது. இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் டி.ஷர்ட், பங்கேற்றதற்கான நற் சான்றிதழ், குடிநீர், ஸ்நாக்ஸ் வழங்கப்பட உள்ளது.

இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க விரும்பும் இருபாலரும் 74017 03516, 80124 98328, 79049 92795 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளத்திலும் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். வரும் 26ம்தேதி இந்த மினி மாரத்தான் ஓட்டத்தை பெரம்பலூர் டிஆர்ஓ கண்ணன், ஆர்டிஓ அனிதா ஆகியோர் முன்னிலையில், பெரம்பலூர் கலெக்டர் ஷரண்யா அறி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பொற்கொடி தலைமையில் விளையாட்டு துறையினர் செய்து வருகின்றனர்.

Tags : International Drug Abuse and Illicit Trafficking Day ,Perambalur ,Start Run- Stop Drugs ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...