- பென்னி குக்
- கூடலூர்
- பெரியார் அணை
- பிறகு நான்
- திண்டுக்கல்
- மதுரை
- சிவகங்கை
- ராமநாதபுரம்
- கர்னல்
- ஜான் பென்னிகுக்
கூடலூர், ஜூன் 24: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக பெரியாறு அணை உள்ளது. இந்த அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் வாழ்க்கை வரலாற்றை, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில், அவரது வரலாறு மற்றும் அணை உருவான வரலாற்றை சேர்க்க வேண்டும் என்பது தென் தமிழகப் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
தென் மாவட்டங்கள் இன்று பசுமையாக காட்சியளிக்கிறது என்றால் அதற்கு காரணம் பெரியாறு அணை. இந்த அணையின் கட்டுமானம், அதனுடைய அன்றைய தொழில்நுட்பம், அனைத்தும் இன்றைய நீரியல் விதிகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் அணையினுடைய வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ளவும் வேண்டும். இன்றைய நிலையில் சுமார் ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவதற்கு அடிப்படையாக உள்ள அணையின் வரலாற்றை, பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என பதிவு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
