×

நெல்லை மாவட்டத்தில் கல்விக் கட்டண விவரங்களை

 

வெளியிடாத தனியார் பள்ளிகள் நெல்லை, ஜூன் 23: நெல்லை மாவட்டத்தில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிடாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் முத்துவீரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டுவந்த கோட்டூர் அஜிஸ், பழனிபாபா பேரவையைச் சேர்ந்த திருக்குமரன் மற்றும் கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: தமிழக கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சமீபத்தில் தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை கட்டண விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திட உத்தரவிட்டுள்ளார். ஆனால் பல தனியார் பள்ளிகள் இந்த உத்தரவை பின்பற்றாமல் உள்ளன. இது கல்வி உரிமைக்கு எதிரானது. எனவே அரசின் உத்தரவை பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.

 

Tags : Nellai ,Tamil Nadu People's Democratic Party… ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...