- ஓரத்தநாடு திருவோணம் சாலை
- சேதுபவசத்திரம் கடயமடை
- ஒரத்தநாடு
- தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் துறை
- தஞ்சாவூர் மாவட்டம்
- திருவனம்
- Gandharvakottai
ஒரத்தநாடு, ஜூன் 23: ஆமை வேகத்தில் நடைபெறும் சாலையின் குறுக்கே கட்டப்படும் பாலத்தின் வேலைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் இருந்து திருவோணம், கந்தர்வகோட்டை செல்லும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் சார்பாக கடந்த திமுக ஆட்சியில் வெட்டிக்காட்டில் இருந்து திருவோணம் வரை செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் நான்கு இடங்களில் பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 4 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த சாலையில் குறுக்கே கட்டும் புதிய பாலம் கட்டும் பணியினால் முக்கிய சாலையின் அருகில் மாற்று சாலை அமைக்கப்பட்டு கனரக வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள், லோடு ஆட்டோக்கள் உள்ளிட்டதை செல்கின்றன.
தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் அதிகமான ஜல்லி கற்களை கொட்டப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் அபாயமாக இருக்கிறது. மேலும் தினமும் இருசக்கர வாகனங்களில் செல்லும் முதியவர்கள் மற்றும் பலர் ஜல்லி கற்கள் மற்றும் காற்றில் பறக்கும் புழுதியினால் சரிந்து விழுந்து காயங்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக நடைபெற்று வரும் பாலத்தின் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் விரைந்து பாலம் கட்டி முடித்து பொதுமக்களின் போக்குவரத்திற்கு சாலையை திறந்து விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சாலை போக்குவரத்து வாசிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பாரா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
