- ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி
- Jayankondam
- ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- அரியலூர் மாவட்டம்
- சர்வதேச யோகா தினம்
ஜெயங்கொண்டம், ஜூன் 23: ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி நடந்தது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட அலகு-1 ஒருங்கிணைப்பாளர் முனைவர் வடிவேலன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் ஜெயச்சந்திரன் தலைமையுரையாற்றினார். கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர்.
கார்த்திகேயன், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் சக்திமுருகன், உடற்கல்வி இயக்குநர் முனைவர் அன்பரசன் மற்றும் கணிதத்துறைத்தலைவர் (பொறுப்பு) முனைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயங்கொண்டம், அறிவுத்திருக்கோயில் யோகா மற்றும் ஆன்மீக கல்விமையம் மனவளக்கலை மன்றம் சார்பில் தலைவர் மற்றும் பேராசிரியர் பழனிமுத்து, பேராசிரியர் பாலு, செயலாளர் மோகன், துணைத்தலைவர்கள் கலியபெருமாள், குமாரி, கௌசல்யா, பழனிராஜ், மாணவ, மாணவிகள் யோகா பயிற்சி அளித்தனர். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலகு-2 ஒருங்கிணைப்பாளர் முனைவர் பவானி நன்றி கூறினார்.
