×

ஈச்சங்காடு கிராமத்தில் குடிநீர் கிணற்றுக்கு செல்லும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு

 

பெரம்பலூர், ஜூன் 23: பெரம்பலூர் மாவட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஷரண்யா அறி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காடு கிராம பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: எங்களது ஈச்சங்காடு கிராமத்தில், குடிநீர் கிணற்றுக்கு செல்லும் பாதையையும், புனித அந்தோணியார் ஆலயத்திற்கு செல்லும் பாதையையும் ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்தனர்.

இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் 2 கி.மீட்டர் சுற்றிக்கொண்டு செல்லும் அவல நிலைதான் உள்ளது. மேலும் விவசாயத்திற்கு செல்லும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அந்த குடும்பத்தாரின் ஆக்கிரமிப்பை அகற்றி தருமாறு கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

 

Tags : Echangadu village ,PERAMBALUR ,DISTRICT ,SHARANYA ARHI ,Eichangadu village ,Veppanthata Taluga ,Annamangalam Uratchi ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...