×

வனத்துறையில் கடும் பணிப்பளு: பெண் ஊழியர்கள் அவதி

 

மதுரை, ஜூன் 23: மதுரை வனத்துறையில் பணிப்பளுவால் பெண் ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. தமிழக வனத்துறையின் மதுரை மண்டல அலுவலகத்தின் கீழ் தென் மாவட்டங்களில் வனப்பாதுகாப்பு, பழங்குடியினர் முன்னேற்றம், மர அறுவை ஆலைகள் கண்காணிப்பு, கனிமவளங்கள் கண்காணிப்பு, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான நிதிப்பலன்கள் உள்பட வனத்துறையின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன், அவற்றை கண்காணிக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் முதல் மண்டல வனப்பாதுகாவலர் வரை 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களில் 30க்கும் மேற்பட்டோர் பெண் அதிகாரிகளாகவும், ஊழியர்களாகவும் உள்ள நிலையில் கடந்த நான்கு மாதங்களாக அவர்களுக்கு 12 மணிநேரம் அறிவிக்கப்படாத கட்டாய வேலை முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் நாளொன்றுக்கு மூன்று அரசு திட்டங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டு, அவற்றின் நிகழ்கால மற்றும் கடந்தகால பணிகள், அவற்றால் பொதுமக்களுக்கான பயன்கள், நிதிச்செலவு உள்ளிட்டவை குறித்து 10 ஆண்டுகளுக்கான தகவல்களை திரட்டி கொடுக்க உத்தரவிடப்படுகிறது. இதனுடன் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திலிருந்து அன்றாடம் வரும் புதிய உத்தரவுகளையும் அன்றைய தினமே முடித்து கொடுக்கவும் உத்தரவிடப்படுகிறது. அவ்வாறு முடித்து கொடுக்காதவர்களை ஒருமையில் பேசுவது, கட்டாய பணியிட மாற்றம் செய்வது, பதவியிறக்கம் செய்வதற்கான ‘மெமோ’ வழங்குவது உள்ளிட்டவை நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Tags : MADURAI ,MADURAI FOREST DEPARTMENT ,Madurai Zonal Office ,Tamil Nadu Forestry Department ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...