×

ேவளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள் பங்கேற்ற விழிப்புணர்வு முகாம்

மதுரை, ஜூன் 23: மதுரை ேவளாண்மை அறிவியல் நிலையத்தில், விளைநிலம் காப்போம் இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விளைநிலம் காப்போம் இயக்கம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகேசன் தலைமை வகித்தார். இணை பேராசிரியரும், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளருமான சுரேஷ் முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகளுக்கு உரங்களின் சமச்சீர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

ேமலும் விவசாயிகள் தொடர்ந்து ஒரே பயிரை பயிரிடாமல், பயிர் சுழற்சி முறையை கடைபிடிக்க வேண்டும்.இதனால் விவசாயத்தில் பூச்சி தாக்குதலை வெகுவாக குறைக்க முடியும். வருடத்தில் ஒருமுறை பயிரிடக்கூடிய நிலத்தில், பயிர்வகை பயிர் என்று சொல்லக்கூடிய தட்டப்பயறு, உளுந்து, பச்சப்பயறு உள்ளிட்டவற்றை பயிர் செய்வது அவசியம் .இதனால் மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது. பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த விளக்கு பொறி, இனகவர்ச்சி பொறிகளை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விவசாயம் சார்ந்த வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Agricultural ,Science ,Institute ,Madurai ,Agricultural Science Institute ,Save the Crops Movement ,Madurai Agricultural Science Institute ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்திற்கான...