அருப்புக்கோட்டை, ஜூன் 23: அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமானோர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் இளைஞர்கள் தவெகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தவெக நிர்வாகி பிரித்திவிராஜ், நகர்மன்ற உறுப்பினர் மணி முருகன் முன்னிலையில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்.
மேலும் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அருப்புக்கோட்டை நகராட்சி 6வது வார்டில் கவுன்சிலர் மணிமுருகன் ஏற்பாட்டில் தவெக சார்பில் பொதுமக்களுக்கு முட்டை பிரியாணி அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட கொள்கை பரப்பு அணி நிர்வாகி சரவணக்குமார், சங்கரநாராயணன், ஒன்றிய செயலாளர் ஹரி பிரசாத், வினோத்குமார், மாரீஸ்வரன், நகர செயலாளர்கள் அப்துல், சதீஷ்குமார், கார்த்திகேயன், நகர இணை செயலாளர் விக்னேஸ்வரன் மற்றும் தவெகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
